நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் மெதுவான வீதம் குறித்து நான் கவலைப்படவில்லை என்றும்; தற்போது ஏற்பட்டுள்ள சில மாற்றங்களால் இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இந்தியன் புள்ளி விவர (Indian Statistical Institute) பல்கலைக் கழகத்தில் அவர் உரையாற்றிய போது, 'இந்தியப் பொருளாதாரம் மந்த நிலை குறித்து எனக்குக் கவலை இல்லை.
கடந்த 2008ஆம் ஆண்டும் இவ்வாறு பொருளாதார சரிவு இருந்தது. அப்போது நான் நிதி அமைச்சராக இருந்தேன்.