தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

கேஸ் சிலிண்டர் விலை உயர்வு! - கேஸ் சிலிண்டர் விலை சென்னையில் உயர்வு

டெல்லி: 3 மாதங்களாக உயர்த்தப்படாமல் இருந்த மானியமில்லாத கேஸ் சிலிண்டர் விலை நாடு முழுவதும் 11.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் மானியமில்லா சிலிண்டர் விலை 37 ரூபாயாக உயர்ந்துள்ளது.

LPG gas price hike
LPG gas price hike

By

Published : Jun 1, 2020, 7:52 PM IST

வழக்கமாக, மானிய விலையில் வருடத்துக்கு 12 கேஸ் சிலிண்டர்கள் எண்ணெய் நிறுவனங்களால் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த 12 சிலிண்டர்களுக்கு மேல் கூடுதலாக சிலிண்டர் வேண்டும் என்றால், அதனை சந்தை விலையில் வாங்கி கொள்ள வேண்டும்.

சர்வதேச சந்தையிலோ, கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் விலை மாற்றம் செய்யப்படுகிறது. இந்த விலையை எண்ணெய் நிறுவனங்கள் அடிக்கடி மாற்றி அமைத்தும் வருகின்றன. அதன்படி தற்போதும் நாடு முழுவதும் சமையல் கேஸ் விலை 11.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

LPG gas price hike

சென்னையில், கடந்த மே மாதம் 569.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர் விலையானது, தற்போது 606.50 ரூபாயாக அதிகரித்துள்ளது. டெல்லியிலும் சிலிண்டர் விலை 11 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 593 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது உயர்த்திய விலையில் சென்னையில்தான் விலை அதிகம்.

இதையும் படிங்க: 16 துணை மின் நிலையங்களை திறந்துவைத்த முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details