தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

இனி 100 மீட்டர் தூரம் வாகனங்கள் நின்றால் சுங்கச்சாவடிகளில் கட்டணம் இல்லை! - NHAI

தேசிய நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டநெரிசலான நேரங்களில் கூட, சுங்கச்சாவடிகளில் வாகனங்களை 10 விநாடிகளுக்கு மேல் காத்திருக்க வைக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளது.

No toll on highways if queue longer than 100 meters, says NHAI
100மீட்டருக்கு மேல் வாகனங்கள் நின்றால் சுங்கச்சாவடிகளில் கட்டணம் இல்லை

By

Published : May 27, 2021, 7:30 AM IST

டெல்லி:புதிய வழிகாட்டு நெறிமுறைகளை குறிப்பிட்டு தேசிய நெடுஞ்சாலைத் துறை இன்று(மே26) வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சுங்கச்சாவடிகளில் 100 மீட்டர் நீளத்திற்கு மேல் வாகனங்கள் நிற்கக் கூடாது. ஏதாவது ஒரு காரணத்திற்காக 100 மீட்டருக்கும் மேல் வாகனங்கள் வரிசையில் நின்றால், 100 மீட்டருக்குள் வாகனங்கள் வரும் வகையில் சில வாகனங்களை கட்டணம் வசூலிக்காமல் அனுப்பி விட வேண்டும்.

இதற்காக சுங்கச்சாவடிகளில் 100 மீட்டர் தூரத்தில் மஞ்சள் கோடு வரையப்படவுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் 100 விழுக்காடு பணமில்லா பரிவர்த்தனை நடைபெறுகிறது. நாட்டில் வளர்ந்து வரும் எலக்ட்ரானிக் டோல் சேகரிப்பைக் கருத்தில் கொண்டு, அடுத்த 10 ஆண்டுகளில் திறமையான கட்டண வசூல் முறையைப் பெறுவதற்கான புதிய வடிவமைப்பு வரவிருக்கும் சுங்கச்சாவடிகளில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது புதிய விதியாக இன்று மாறியுள்ள நிலையில், பாஸ் டேக் முறையை வாகன ஓட்டிகள் விரும்புகின்றனர். இது சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையேயான தொடர்பை ரத்து செய்கிறது. பாஸ் டேக்கட்டண முறை, கட்டண நடவடிக்கைகளின் செயல்திறனைக் கூட்டியுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வாகன ஓட்டிகளே கவனம்: சுங்கச்சாவடிகள் வழியாகப் போனால் இது கட்டாயம்!

ABOUT THE AUTHOR

...view details