தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

யெஸ் வங்கியில் டெபாசிட் செய்த பணம் பத்திரமாக தான் உள்ளது - ஐ.பி.ஏ தகவல்! - யெஸ் வங்கி

மும்பை: யெஸ் வங்கி சேமிப்பு கணக்கில் வைக்கப்பட்டு இருக்கும் அனைத்து தொகையும் பத்திரமாகத்தான் உள்ளது என இந்தியன் பேங்க் அசோஸியேஷன் தெரிவித்துள்ளது.

yes bank  deposit
yes bank deposit

By

Published : Mar 13, 2020, 3:22 PM IST

இந்தியாவின் தனியார் வங்கிகளில் ஒன்றான யெஸ் வங்கி, பெரும் நிதிச் சிக்கலை எதிர்கொண்டிருப்பதால், ரிசர்வ் வங்கி பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இதனால், அந்த வங்கியில் பணத்தை டெபாசிட் செய்தவர்கள், பங்குகளில் முதலீடு செய்தவர்கள், கடன் பத்திரங்களை வாங்கியவர்கள் பதற்றத்தில் இருக்கிறார்கள்.

தனது பணம் பத்திரமாக இருக்கிறதா, டெபாசிட் செய்த பணம் திரும்ப கிடைக்குமா என பல குழப்பங்களில் வாடிக்கையாளர்கள் இருக்க, தங்களின் சேமிப்பு பணம் பத்திரமாக இருக்கிறது என, இந்தியன் பேங்க் அசோஸியேஷன் தெரிவித்துள்ளது.

யெஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி பல கட்டுப்பாடுகள் விதித்த பின், பண பரிமாற்றத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டன. அதனை தொடர்ந்து இணையப் பணப்பரிமாற்ற சேவையும் தடை செய்யப்பட்டது. பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் கவலை தெரிவித்த நிலையில், விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி நீக்கியுள்ளது.

மேலும் வாடிக்கையாளர்கள் பணம் பத்திரமாக உள்ளதாக, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்ததை அடுத்து இந்தியன் பேங்க் அசோஸியேஷன் தலைவர் சுனில் மேத்தா, வாடிக்கையாளர்கள் பணம் பத்திரமாக உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சரிவில் சந்தை: எந்தெந்த பங்குகளை வாங்கலாம்? நிபுணரின் கருத்தைக் கேட்கலாம்...

ABOUT THE AUTHOR

...view details