பிகார் துணை முதலமைச்சரும் சர்வதேச பொருள்களுக்கானஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் ஒருங்கிணைப்பாளருமான சுஷில் குமார் மோடி, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு 92ஆவது ஆண்டு கூட்டத்தில் பேசியதாவது:
தற்போதைய சூழலில் சரக்கு மற்றும் சேவை வரியில் மாற்றம் கொண்டுவர வாய்ப்பில்லை. இந்த வாரம் சரக்கு மற்றும் சேவை வரி குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. அப்போது லாட்டரிகளுக்கு 28 சதவிகிதம் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பது என்று முடிவானது. இதில் மாற்றம் இல்லை.
பொருளாதாரத்தில் மந்தநிலை நிலவுகிறது. இச்சூழலில் ஏற்கனவே உள்ள 0, 5, 12, 18, 28 என்ற சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தில் மாற்றம் இல்லை.