பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டார். அதன்படி புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது, அதற்கு பதிலாக புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இருப்பினும், கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பு நீக்கம் செய்யவுள்ளதாகவும், இதனால் அதை அச்சடிக்கும் பணிகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இதை மத்திய அரசு தொடர்ந்து மறுத்துவருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலம் நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் அளித்துள்ள பதிலில், "மக்களின் தேவைக்கு ஏற்ப ரிசர்வ் வங்கியின் ஆலோசனையின்படியே ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறது. 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தும் எண்ணம் எதுவும் மத்திய அரசுக்கு தற்போது இல்லை.