உணவுப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, நவம்பர் மாதத்திற்கான நாட்டின் சில்லறை பணவீக்கம் 5.54 விழுக்காடாக குறைந்துள்ளது. மூன்றாவது மாதமாகத் தொடர்ந்து தொழில்துறைக்கான உற்பத்தி 3.8 விழுக்காடாக குறைந்துள்ளது. இதன்மூலம் பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பது தெளிவாகிறது.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பொருளாதாரம் தேக்கநிலை அடைந்துள்ளதா என செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு, "பொருளாதார நிலை எப்படி கட்டமைக்கப்படுகிறது என்பது குறித்து நான் அறிவேன். இது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து செயல்பட்டுவருகிறோம்" எனத் தெரிவித்தார்.