இந்தியா முழுவதும் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மூங்கில்களாலான குடிநீர் பாட்டில், மாட்டுச் சாணத்தாலான சோப்புகளை நேற்று வெளியிட்டார்.
மாட்டுச் சாணத்தில் தயாரித்த சோப்பை வெளியிட்ட நிதின் கட்கரி!
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாட்டுச் சாணத்தில் தயாரிக்கப்பட்ட சோப்புகளை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகம் செய்து வைத்தார்.
Nitin Gadkari launches cow dung soap
காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தால் ( Khadi and Village Industries Commission) உருவாக்கப்பட்ட இந்தக் குடிநீர் பாட்டிலின் விலை ரூ.560 எனவும், ஒரு சோப்பின் விலை ரூ.125 எனவும் கட்கரி கூறினார். மேலும் பேசிய அவர், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்கான செயல்களில் மத்திய அரசு செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.