தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

12,000 புள்ளிகளுக்குமேல் உயர்ந்த நிஃப்டி💲! - stock market news on 7th november

மும்பை: மத்திய அரசு நேற்று, ரியல் எஸ்டேட் துறைக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்த நிலையில், இன்று தொடங்கிய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்ட்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளன.

SHARE MARKET

By

Published : Nov 7, 2019, 5:13 PM IST

பொருளாதாரத்தை சரி செய்ய மத்திய அரசு புதிய முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், நேற்று ரியல் எஸ்டேட் துறைக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இன்று தொடங்கிய பங்குச்சந்தையில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 200 புள்ளிகள் அதிகரித்து, 40 ஆயிரத்து 676 புள்ளிகள் என்ற புதிய உச்சத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கியது.

ரியல் எஸ்டேட் பங்குகள் அனைத்தும் சிறப்பாக செயல்பட்ட நிலையில், பங்குச்சந்தை முடிவின்போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 183 புள்ளிகள் உயர்ந்து 40,000 எனவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 40 புள்ளிகள் அதிகரித்து 12,012 எனவும் வர்த்தகமானது.

இதனைத் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட பங்குகளில் சன் ஃபார்மா, வேதாந்தா, ஹின்டால்க்கோ போன்ற பங்குகள் இடம்பிடித்த நிலையில், பிபிசிஎல், யெஸ் பேங்க் பங்குகள் சரிவை சந்தித்து வருகின்றன.

மேலும் ஜூன் மாதத்திற்குப் பிறகு, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, 12,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அடுத்த 5 ஆண்டுகளில் 12 லட்சம் நேரடி வேலை வாய்ப்பு - நாஸ்காம் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details