கரோனா ஊரடங்கு காலத்தில் ஓடிடி தளங்களின் பயன்பாடு வியக்கத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி, ஓடிடி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள அதிரடி ஆஃபர்களை கொடுத்துவருகிறது.
இந்தியாவில் Netflix சந்தா விலை 60 விழுக்காடு குறைப்பு - நெட்ப்ளிக்ஸ் புதிய திரைப்படங்கள்
உலகின் முன்னணி ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் இந்தியாவில் தனது சந்தா கட்டணத்தை 60 விழுக்காடு குறைப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
![இந்தியாவில் Netflix சந்தா விலை 60 விழுக்காடு குறைப்பு Netflix சந்தா விலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-13907791-thumbnail-3x2-l.jpg)
Netflix
அந்த வகையில், நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது சந்தா கட்டணத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது. இதன்படி மாத சந்தா கட்டணம் முன்பை விட 60 விழுக்காடு குறைந்துள்ளது. புதிய விலை குறைப்பின்படி, இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் மொபைல் சந்தாவின் தொடக்க விலை ரூ. 149 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல நெட்ப்ளிக்ஸ் பேசிக் சந்தா விலை ரூ.499இல் இருந்து ரூ. 199 என குறைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நெட்ஃபிளிக்கஸுக்காக இணையத்தொடரை இயக்கும் சஞ்சய் லீலா பன்சாலி