தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

மீண்டும் மணம் முடிக்கும் ரோஹன்மூர்த்தி! - மீண்டும் மணம் முடிக்கும் ரோஹன் மூர்த்தி

பெங்களூரு: இன்போசிஸ் இணை நிறுவனரின் ஒரே மகனான ரோஹன் மூர்த்தி, மறு திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Rohan murthy getting married

By

Published : Nov 15, 2019, 9:37 PM IST

நாராயண மூர்த்தியின் ஒரே மகனான ரோஹன்மூர்த்தி, அபர்ணா கிருஷ்ணன் என்பவரை வரும் டிசம்பர் 2ஆம் தேதி மணம் முடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இன்போசிஸ் நிறுவனம் பற்றி அறியாதவரே கிடையாது. 1981ஆம் ஆண்டு ஏழு பேர் கொண்டு இந்நிறுவனம் தொடங்கப்பட்டாலும், அணைத்து துன்பங்களிலும் இந்நிறுவனுத்துடன் துணை நின்றவர் நாராயண மூர்த்தி. இவர் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து விடை பெற்றபோது, அவர் மகனான ரோஹன்மூர்த்தியை அந்நிறுவனத்தில் தலைமைப் பதவி வகிக்க அழைத்தனர்.

அதற்கு மறுப்பு தெரிவித்த நாராயண மூர்த்தி, ரோஹனின் வாழ்க்கை வேறு என்றும்; அவன் தனிப் பாதையில் பயணிக்கட்டும் என்றும் தெரிவித்தார்.

ரோஹன் மூர்த்தி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் (Harvard University) பயின்று, தற்போது அங்கேயே பணியாற்றி வருகிறார். 2011ஆம் ஆண்டு இவருக்கு TVS தலைமை அதிகாரியான வேணு ஸ்ரீநிவாசனின் மகளான லட்சுமி வேணு உடன் திருமணம் நடைபெற்றது.

இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் 2015ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் தற்போது வந்த தகவலின்படி ரோஹன்மூர்த்தி கேரளாவைச் சேர்ந்த அபர்ணா கிருஷ்ணன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்யவுள்ளார் என்றும்; இந்தத் திருமணம் டிசம்பர் 2ஆம் தேதி நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:ஒரே நாளில் 17 விழுக்காடு சரிவைச் சந்தித்த இன்ஃபோசிஸ் நிறுவனம்!

ABOUT THE AUTHOR

...view details