தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

தொடர்ந்து 9ஆவது ஆண்டாக பணக்காரர் பட்டியலில் முதலிடம் வகிக்கும் முகேஷ் அம்பானி - விப்ரோ நிறுவனத் தலைவர் அசிம் பிரேம்ஜி

சுமார் 6.58 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி இந்தியப் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

By

Published : Sep 29, 2020, 9:23 PM IST

Updated : Sep 29, 2020, 9:56 PM IST

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ஐ.ஐ.எஃப்.எல் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி சுமார் 6.58 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் அவர் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக முதலிடத்தைத் தக்க வைத்துள்ளார்.

ஆசிய அளவில் முதலிடத்திலும், உலக அளவில் நான்காவது இடத்திலும் உள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பானது, கடந்த ஒரு வருடத்தில் 73 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

அவரைத் தொடர்ந்து, லண்டனைச் சேர்ந்த ஹிந்துஜா சகோதரர்கள் 1.43 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் இரண்டாவது இடத்திலும், ஹெச்.சி.எல். நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார் 1.41 லட்சம் கோடி ரூபாய் உடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இவர்களுக்கு அடுத்தபடியாக அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி நான்காவது இடத்திலும், விப்ரோ நிறுவனத் தலைவர் அசிம் பிரேம்ஜி ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

இதையும் படிங்க:கோவிட்-19 எதிரொலி : நிறுவனங்களை பாதுகாக்க திவால் சட்டம் மேலும் 3 மாதங்களுக்கு ரத்து

Last Updated : Sep 29, 2020, 9:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details