தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

இனி ஆசியாவின் முதல் பணக்காரர் முகேஷ் அம்பானி இல்லை!

டெல்லி: கொரானா தாக்கத்தால் பங்குசந்தையில் கச்சா எண்ணெய் நிறுவன பங்குகளின் விலை குறைந்ததையடுத்து ஆசியாவின் முதல் பணக்காரர் என்ற இடத்திலிருந்து, ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி 2ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

Mukesh Ambani oil price fall
Mukesh Ambani oil price fall

By

Published : Mar 11, 2020, 11:42 AM IST

கொரோனா தாக்குதலால் கச்சா எண்ணெய் பங்குகளின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் நிறுவனங்கள் 12 ஆண்டுகள் கண்டிடாத கடும் சரிவை சந்தித்துவருகின்றன. வளைகுடா போர் பதற்றத்தின்போது கச்சா எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கியது. அதன் பின் தற்போது தான் கச்சா எண்ணெய் நிறுவனங்கள் தள்ளாடி வருகின்றன.

கச்சா எண்ணெயின் விலை கடும் சரிவை சந்தித்தாலும், இந்தியாவிற்கு அது லாபமாக பார்க்கப்பட்டு வருகிறது. நஷ்டத்திலும் ஒரு லாபம் என்று சொல்லுவது போல், கச்சா எண்ணெய் நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்ததால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. பொதுமக்களுக்கு இது மகிழ்ச்சியை அளித்தாலும், இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் என்று அழைக்கப்படும் முகேஷ் அம்பானிக்கு இது கஷ்டகாலமாக மாறியுள்ளது.

கஷ்டகாலம் என்று சொல்வதை விட நஷ்டகாலம் என்று தான் சொல்லவேண்டும். முகேஷ் அம்பானியின் கச்சா எண்ணெய் நிறுவன பங்குகள் பல ஆயிரம் கோடி ரூபாய் வரை சரிந்துள்ளது. இதனால் இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற இடத்தையும் அம்பானி இழந்துள்ளார்.

முகேஷ் அம்பானிக்கு சுமார் 43 ஆயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவரது சொத்து மதிப்பு சுமார் 3 லட்சத்து 14 ஆயிரத்து 250 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இந்நிலையில், 3 லட்சத்து33 ஆயிரத்து750 கோடி ரூபாய் மதிப்புடன் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை சீனாவின் அலிபாபா குழுமத்தின் நிறுவனர் ஜேக் மா பெற்றுள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு வரை ஆசியாவின் முதல் பணக்காரராக இருந்த இவர் அந்த இடத்தை முகேஷ் அம்பானியிடம் 2019ஆம் ஆண்டு இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கொரோனா எதிரொலி - இறைச்சியின் விற்பனை 35% சரிவு

ABOUT THE AUTHOR

...view details