அபுதாபியைச் சேர்ந்த முன்னணி முதலீட்டு நிறுவனமான முபாதலா இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோவின் 1.85 விழுக்காடு பங்குகளை 9 ஆயிரத்து 93 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
சுமார் 229 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட முபாதலா நிறுவனம் வான்வெளி, சுரங்கம், எரிவாயு, சுகாதாரம், மருந்து உற்பத்தி என பல்வேறு துறைகளில் இயங்கிவருகிறது. இதுகுறித்து ரிலையன்ஸ் இன்டஸ்ரிஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, இந்தியாவை டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக அபுதாபியின் தலைசிறந்த நிறுவனமான முபாதலாவிடம் கைகோர்த்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.