இப்சோஸ் நிறுவனம் உலகளவில் ஒரு ஆய்வினை நடத்தியது. இதில், “பூட்டுதலுக்கு பிறகான வேலைவாய்ப்பு குறித்து 16 நாடுகளில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் 73 விழுக்காடு நகர்புற இந்தியர்கள் ஊரடங்கை முழுமையாக தளர்த்தும்போது வேலைவாய்ப்பு திரும்பகிடைக்கும் என பதிவுசெய்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதற்கு நேர்மாறான கருத்தை பதிவுசெய்துள்ளனர்.
பிரான்ஸை சேர்ந்த 69 விழுக்காட்டினர், வடகொரியா, வட ஆப்ரிக்காவைச் சேர்ந்த 62 விழுக்காட்டினர், ஸ்பெயினைச் சேர்ந்த 62 விழுக்காட்டினரும் வேலை திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லை என தெரிவித்தனர்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.