தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

நகரங்களில் கோடிக்கு மேல் காலியாக இருக்கும் வீடுகள் - வீட்டுவசதி செயலர் தகவல்!

டெல்லி: நகர்ப்புறங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான வீடுகள் காலியாக உள்ளதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் செயலர் துர்கா சங்கர் மிஸ்ரா தெரிவித்தார்.

By

Published : Aug 28, 2020, 4:30 PM IST

நகரங்களில் கோடிக்கு மேல் காலியாக இருக்கும் வீடுகள் - வீட்டுவசதி செயலாளர் தவகல்!
நகரங்களில் கோடிக்கு மேல் காலியாக இருக்கும் வீடுகள் - வீட்டுவசதி செயலாளர் தவகல்!

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் செயலர் துர்கா சங்கர் மிஸ்ரா டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான வாடகை வீடுகள் காலியாக உள்ளன. இந்த வீட்டை குறைந்த விலையில், ஏற்கக்கூடிய வண்ணம் வாடகைக்கு விடுவதற்கு வசதி ஏற்படுத்தப்படும்.

வெளியிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு, குறிப்பாக பெரிய நகரங்களில், மலிவு விலையில் தங்குவதற்கு ஒரு இடம் வேண்டும். அதுமட்டுமின்றி அவர்களின் குழந்தைகளும் கல்வி கற்க சிறந்த வாய்ப்புகள் இருக்க வேண்டும். இவையெல்லாம் இந்த நடைமுறையின் மூலம் முழுமை பெறலாம். அதுமட்டுமின்றி அவர்களும் பெரியதாக கனவு காணவும், வாழ்க்கையில் உயர்ந்து, நாட்டின் வளர்ச்சி பங்களிப்பாற்ற முடியும்” என்றார்.

இதையடுத்து பேசிய இணைச் செயலர் அமிர்த் அபிஜாத், “சில திட்டங்களை அறிவித்து தனியாருக்கு அரசு உதவ முயற்சிக்கிறது. அதுமட்டுமின்றி வாடகை வீட்டின் விலையை குறைக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது" என்று கூறினார்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக நகரங்களில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்வதற்கு குறைவான, ஏற்க கூடிய விலையில் வாடகை வீட்டை அளிக்க தேவையான நடவடிக்கை எடுக்க ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...புதிய கல்விக் கொள்கை 2020 : ஆசிரியர்களை கருத்து தெரிவிக்க வலியுறுத்துவது வெறும் கண்துடைப்பு!

ABOUT THE AUTHOR

...view details