தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

இந்திய அந்நிய செலாவணி மதிப்பு சரிவு! - ந்திய அந்நிய செலாவணியை குறைத்து மதிப்பிட்டு மூடிஸ் நிறுவனம்

டெல்லி: இந்திய வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அந்நிய செலாவணி மதிப்பு குறைந்துள்ளதாக மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Moody rating
Moody rating

By

Published : Jun 2, 2020, 2:45 AM IST

நாடு முழுவதும் லாக்டவுனால் முடங்கி போயுள்ள நிலையில், ஏற்கனவே முடங்கியுள்ள பொருளாதாரம் மேலும் சரியும் என மூடிஸ் அறிவித்துள்ளது. இந்த நிலையில் 2020ம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியை 2.5% ஆகக் குறைத்து மூடிஸ் கணித்துள்ளது.

மேலும் நடப்பு 2020 - 2021-க்கான உலகப் பொருளாதார பார்வையில் மூடிஸ் நிறுவனம் இந்தியா தனது வருவாயில் இழப்பினை சந்திக்ககூடும் என்றும் கணித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்திய அந்நிய செலவாணியும் குறைந்துள்ளதாக மூடிஸ் தெரிவித்துள்ளது.

பொதுவாக, எந்த ஒரு நாடாக இருந்தாலும், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரங்களைச் செய்ய வேண்டும் என்றால், அவர்களிடம் அமெரிக்க டாலர் கையிருப்பு இருக்க வேண்டும். பெரும்பாலான ஏற்றுமதி இறக்குமதி வியாபாரங்களுக்கு அமெரிக்க டாலரில் தான் பணப் பரிவர்த்தனைகள் நடக்கும். எனவே ஒரு நாட்டுக்கு அந்நிய செலாவணி கையிருப்பு மிகவும் அவசியமாகிறது.

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு கணக்குகளை, மத்திய ரிசர்வ் வங்கி கவனித்து வருகிறது. இந்நிலையில் இந்திய அந்நிய செலாவணியை குறைத்து மதிப்பிட்டுயிருக்கிறது மூடிஸ். அந்த வகையில், கடந்த 13 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு அந்நிய செலாவணியை குறைத்து மூடிஸ் மதிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ’டெடியுடன்’ பேருந்தில் பயணித்த இளம்பெண்!

ABOUT THE AUTHOR

...view details