கரோனா லாக்டவுன் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்கத்தை களைய தற்சார்பு இந்தியா திட்டம் என்ற பெயரில் ரூ. 20 லட்சம் கோடி சிறப்பு நிதிச் சலுகையை மத்திய அரசு அறிவித்தது. இது குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.
அதில் அவர் பேசியதாவது, "வணிக நடவடிக்கைகள் தொடர்வதற்கு சிறப்பு நிதிச் சலுகை அறிவிப்பு அவசியமான ஒன்று. லாக்டவுன் அறித்தவுடன் பிரதமர் கரிப் கல்யாண் திட்டத்தின் மூலம் நேரடி பண உதவி அளிக்கப்பட்டது. நேரடி பணப் பரிவர்த்தனையுடன் நிறுத்திக்கொள்ளாமல் அதன் தொடர்ச்சியாக சிறப்பு நிதிச் சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது.