இந்தியாவில் கோவிட்-19 பரவல் காரணமாக தொழில்துறை முற்றிலும் முடங்கியுள்ளது. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுசூகி, ஏப்ரல் மாதம் ஒரு காரைக்கூட விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகும் பொருளாதாரம் நிலையில்லாமல் இருப்பதால் பலரும் அத்தியாவசிய செலவுகளைத் தவிர மற்ற செலவுகளை தள்ளிப்போடும் மனநிலையில் உள்ளனர்.
இந்நிலையில், தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் மாருதி சுசூகி நிறுவனம் 'Buy-Now-Pay-Later Offer' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்காகச் சோழமண்டலம் நிதி நிறுவனத்துடன் மாருதி சுசூகி கைகோர்த்துள்ளது.