தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

டிசம்பர் 2020இல், 20% விற்பனையை அதிகரித்து சாதனை படைத்த மாருதி சுசூகி! - கார்கள் விற்பனை

2020 டிசம்பர் மாதத்தில் வாகன விற்பனை 20.2% விழுக்காடு அளவு உயர்ந்ததாக மாருதி சுசூகி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மொத்தம் இந்த மாதத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 226 வாகனங்களை நிறுவனம் விற்றுள்ளது.

Maruti Suzuki sales rise 20 pc in Dec
Maruti Suzuki sales rise 20 pc in Dec

By

Published : Jan 1, 2021, 5:33 PM IST

டெல்லி: இந்தியாவின் பெரும் கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி, 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தைவிட, 2020ஆம் ஆண்டு இதே மாதத்தில் 20.2% விழுக்காடு அளவிற்கு கூடுதலாக வாகனங்களை விற்றுள்ளது.

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறுவனம் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 296 வாகனங்களை விற்றிருந்தது. இதே 2020ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து, 60 ஆயிரத்து 226 வாகனங்களை நிறுவனம் விற்றுள்ளது. இது 20.2% விழுக்காடு உயர்வாகும்.

உள்நாட்டில் விற்பனை மட்டும் 17.8 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஆல்டோ, எஸ்-பிரெஸோ கார்களின் விற்பனை 24,927ஆக 4.4 விழுக்காடு அளவு உயர்ந்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டில் 23,883ஆக விற்பனையாகியிருந்தது.

டெல்லி - ஆக்ரா சுங்கச் சாலைப் பங்குகளை விற்ற ரிலையன்ஸ் இன்ஃப்ரா!

ஸ்விஃப்ட், செலிரியோ, இக்னிஸ், பலேனோ, டிசைர் ஆகிய கார்களின் விற்பனை 18.2% (77,641 கார்கள்) உயர்ந்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டின் இறுதியில் 65,673 கார்கள் விற்பனையாகியிருந்தன.

விடாரா பிரிஸா, எஸ்-கிராஸ், எர்டிகா ஆகிய வாகனங்களின் விற்பனை 8% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details