தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

மாருதி சுசூகி நிறுவனத்தின் வாகன உற்பத்தி 11 விழுக்காடு உயர்வு - கரோனா லாக்டவுன் இந்தியா

ஆகஸ்ட் மாத காலகட்டத்தில் மாருதி சுசூகி நிறுவனத்தின் வாகன விற்பனை 11 விழுக்காடு உயர்வைச் சந்தித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Maruti Suzuki
Maruti Suzuki

By

Published : Sep 7, 2020, 10:42 PM IST

நாட்டின் முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி இம்மாத வாகன உற்பத்தி குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாத காலகட்டத்தில் வாகன விற்பனையானது 11 விழுக்காடு உயர்வைக் கண்டுள்ளது.

பயணிகள் வாகன விற்பனை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடும் போது சுமார் 11 ஆயிரம் உயர்ந்து ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 381 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அதேபோல் மினி கார்கள் உற்பத்தியும் சுமார் 61 விழுக்காடு உயர்வை சந்தித்துள்ளது. ஆகஸ்ட் மாத காலகட்டத்தில் 22 ஆயிரத்து 208 மினிகார்கள், 67 ஆயிரத்து 348 காம்பேக்ட் ரக கார்கள், 21 ஆயிரத்து 737 யுடிலிட்டி ரக வாகனங்கள், கமர்சியல் ரக வாகனங்கள் 2 ஆயிரத்து 388 உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

கரோனா லாக்டவுன் காரணமாக உற்பத்தித் துறை பெரும் தேக்கம் கண்டுள்ள நிலையில், ஜூலை, ஆகஸ்ட் மாத காலகட்டத்தில் உற்பத்தி துறையானது தற்போது மெல்ல முன்னேற்றம் கண்டுவருகிறது.

இதையும் படிங்க:எச்சரிக்கை மணியடிக்கும் ஜி.டி.பி. வீழ்ச்சி - ரகுராம் ராஜன் கவலை

ABOUT THE AUTHOR

...view details