டெல்லி: நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி, வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தனது வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளது.
நிறுவனத்தின் அறிக்கையின்படி, டெல்லி விற்பனை நிலைய விலையிலிருந்து 1.9 விழுக்காடு அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், நடுத்தர மக்கள் அதிகம் விரும்பும் செலெரியோ மாடல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என நிறுவனம் அறிவித்துள்ளது.
தொடரும் விலையேற்றம்
இந்த ஆண்டில், மூன்றாவது முறையாக தங்கள் நிறுவன வாகனங்களின் விலையை மாருதி சுசூகி உயர்த்தியுள்ளது. மொத்தமாக ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை 3.5 விழுக்காடு அளவுக்கு கார் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மாருதி சுசூகி நிறுவனமானது, குறைந்த விலை ஆல்டோ கார் முதல் பிரீமியம் எஸ் கிராஸ் வரை, ரூ.2.99 லட்சம் முதல் ரூ.12.39 லட்சம் வரை விற்பனை செய்துவருகிறது.