இந்தியப் பொருளாதார மந்த நிலை காரணமாக, வாகன உற்பத்தித் துறையில் உற்பத்தி விகிதம் முன்பில்லாத அளவிற்குச் சரிவைக் கண்டுள்ளது. இதனால், முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் தங்களது வேலையை இழந்துள்ளனர்.
மாருதி சுசுகி 2 நாள் உற்பத்தி நிறுத்தம்! - maruthi suzhuki no production dates
டெல்லி: பொருளாதார மந்தநிலை காரணமாக இந்தியாவின் மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி, செப்டம்பர் 9, 7 ஆகிய தேதிகளில் அதன் உற்பத்தியை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி, அதன் குருகிராம், மனேசார் ஆலைகளில் செப்டம்பர் 7,9 ஆகிய இரண்டு தேதிகளில் உற்பத்தியை நிறுத்தும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
பங்குச் சந்தையில் மாருதி சுசுகியின் பங்குகள் 2.4 சதவீதம் குறைந்து, 5 ஆயிரத்து 900 ரூபாயாக இன்று மதியம் விற்பனையானது. முன்னதாக, ஆகஸ்ட் மாதத்தில் மாருதி சுசுகி, அதன் உற்பத்தியில் 33.99 சதவீதத்தைக் குறைத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.