இந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலைமை தேக்கம் அடைந்துள்ளதாக துறை சார்ந்த நிபுணர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வாகன விற்பனை துறையானது பல மாதங்களாக விற்பனையில் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. பல்வேறு நிறுவனங்கள் தங்கள் கிளைகளை மூடிவரும் நிலையில் மாருதி சுசுகி நிறுவனம் தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை வீட்டுக்கனுப்பிய மாருதி சுசுகி - பணி நீக்கம்
டெல்லி சந்தையில் ஏற்பட்ட வியாபார மந்தத்தன்மையால் சுமார் 1,800 ஒப்பந்த ஊழியர்களை மாருதி சுசுகி நிறுவனம் வேலை நீக்கம் செய்துள்ளது.
maruthi
நிறுவனத்தின் நிதிச்சுமையைக் குறைக்கும் விதமாக மாருதி தனது ஆறு சதவிகித ஒப்பந்த பணியாளர்களை அதிரடியாக வேலை நீக்கம் செய்துள்ளது. அதன்படி கடந்த நான்கு மாதத்தில் மொத்தம் 1,181 நபர்களை வேலை நீக்கம் செய்துள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன உற்பத்தித்துறையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை காரணமாக வேலையின்மை பிரச்னை பெருமளவில் ஏற்படும் என்ற அச்சம் தற்போது உருவாகியுள்ளது.