மும்பை: சென்செக்ஸில் அதிகபட்சமாக இண்டஸ் இண்ட் பேங்க் பங்கு விலை 5.06% (552.85 ரூபாய்) உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக எஸ்பிஐ, இந்துஸ்தான் யூனிலிவர், டாடா ஸ்டீல், ஐடிசி ஆகிய பங்குகள் முறையே 1.80, 1.45, 1.23, 1.00 விழுக்காடு உயர்ந்துள்ளன.
அதிகபட்சமாக பஜாஜ் பைனான்ஸ் 4.45 விழுக்காடு சரிந்துள்ளது. கடந்த ஐந்து நாள்களாக தொடர் ஏற்றத்திற்குப் பின்னர் இன்று இந்திய சந்தைகள் சறுக்கியுள்ளன. இண்டஸ் இண்ட் பேங்க், எஸ்பிஐ ஆகிய வங்கித் துறை பங்குகள் திருப்திகரமான வளர்ச்சியை எட்டியுள்ளன.
ஐந்தாம் நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை!
டெல்லியில், டீசல் இப்போது லிட்டருக்கு 80.78 ரூபாயாகவும், பெட்ரோல் லிட்டருக்கு 80.43 ரூபாயாகவும் உள்ளது. கொல்கத்தாவில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 82.10 ரூபாயாகவும், டீசல் விலை 75.89 ரூபாயாகவும் உள்ளது. மும்பையில், பெட்ரோல் லிட்டருக்கு 87.19 ரூபாயிலும் டீசல் 79.05 ரூபாயிலும் விற்பனையாகிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 83.63 ரூபாயாகவும் டீசல் விலை 77.91 ரூபாயாகவும் உள்ளது.
ஜூலை 7 பங்குச் சந்தை நிலவரம் தேசிய தலைநகரில் பெட்ரோலை விட டீசலின் விலை அதிகமாக உள்ளது. முதல் முறையாக டீசல் விலை ஜூன் 24ஆம் தேதி அன்று தேசிய தலைநகரில் பெட்ரோல் விலையைத் தாண்டி 79.76 ரூபாயை எட்டியிருந்தது.