தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பங்குச் சந்தை நிலவரம்: சென்செக்ஸ் 409 புள்ளிகளை ஈட்டியது; நிஃப்டி 10,800ஐ கடந்தது!

இன்றைய வர்த்தக நாள் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 408.68 புள்ளிகள் உயர்ந்து 36,737.69 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 107.70 புள்ளிகள் ஏற்றம் கண்டு 10,813.45 புள்ளிகளில் முடிவுற்றது.

market update july 9
market update july 9

By

Published : Jul 9, 2020, 5:44 PM IST

மும்பை: தொடர்ந்து சில தினங்களாக ஏற்றம் கண்டுவந்த பங்குச் சந்தை நேற்று சரிவைச் சந்தித்தது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் மீண்டும் சிறிது அச்சத்தை ஏற்படுத்தியது. இச்சூழலில் இன்று இந்திய பங்குச் சந்தைகளில், பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனப் பங்குகளில், பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ வங்கி, டாடா ஸ்டீல், ஹெச்.டி.எப்.சி. நிறுவனம், மகிந்திரா அண்ட் மகிந்திரா உள்ளிட்ட 22 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம், ஓ.என்.ஜி.சி., டெக் மகிந்திரா, மாருதி, டி.சி.எஸ். உள்ளிட்ட எட்டு நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

பங்குச் சந்தை நிலவரம்: வீழ்ச்சியைக் கண்ட சென்செக்ஸ்!

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,430 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. 1,271 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது. 150 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்தச் சந்தை மதிப்பு 144.31 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. ஆகவே, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டுமொத்த அளவில் சுமார் 89 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைத்தது.

ஜூலை 9 பங்குச் சந்தை நிலவரம்

இன்றைய வர்த்தக நாள் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 408.68 புள்ளிகள் உயர்ந்து 36,737.69 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 107.70 புள்ளிகள் ஏற்றம் கண்டு 10,813.45 புள்ளிகளில் முடிவுற்றது.

ABOUT THE AUTHOR

...view details