மும்பை: வாரத்தின் மூன்றாவது நாளான புதன்கிழமை, இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வணிகத்தை தொடங்கின. காலை வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டது.
அந்த வகையில் வர்த்தக நிறைவில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 316 புள்ளிகள் உயர்ந்து 43,593.67 ஆக காணப்பட்டது. நிஃப்டி 118.05 உயர்ந்து 12,749.15 ஆக வர்த்தகமானது.
தேசிய பங்குச் சந்தையில் ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், டாக்டர் ரெட்டி, ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ் சர்வீஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்தில் வர்த்தமாகின. இந்த்இண்டியா வங்கி, ரிலையன்ஸ், டைடான் நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.
சென்செக்ஸ் 316 புள்ளிகள் ஏற்றம்; நிஃப்டி 12,700ஐ தாண்டியது! மும்பை பங்குச் சந்தையில் டாடா ஸ்டீல், அப்பல்லோ மருத்துவமனை உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தையும், ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் இழப்பையும் சந்தித்தன.