மும்பை பங்குச் சந்தை இன்று (ஜூன் 22) சுமார் 180 புள்ளிகள் உயர்ந்து 34,911 புள்ளிகளில் வர்த்தகமானது. இந்திய, சீன எல்லையில் ஏற்பட்ட பதற்ற நிலை இந்திய பங்குச் சந்தையில் பலமாக எதிரொலித்துள்ளது. இந்தியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 69 புள்ளிகள் அதிகரித்து 10,311 புள்ளிகளில் வர்த்தகத்தை மேற்கொண்டது.
காரணம் என்ன?
சர்வதேச பங்குச் சந்தைகள் இன்று (ஜூன் 22) ஏற்றம் கண்டு வர்த்தகமாகின. அதன் தாக்கத்தால், இந்திய பங்குச் சந்தையும் ஏற்றம் கண்டது. எல்லையில் ஏற்பட்ட பதற்ற நிலை இந்திய பங்குச் சந்தையில் பலமாக எதிரொலித்ததாகப் பங்குச் சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.