தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பங்குச் சந்தை நிலவரம்: தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி

இன்றைய பங்கு வர்த்தக நாள் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 39.55 புள்ளிகள் உயர்ந்து 39,113.47 புள்ளிகள் என வர்த்தகமானது.

பங்குச் சந்தை நிலவரம்
பங்குச் சந்தை நிலவரம்

By

Published : Aug 27, 2020, 7:25 PM IST

மும்பை: தொடர்ந்து ஐந்தாவது நாளாக பங்குச் சந்தை முகமைகளான சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றத்தைக் கண்டுள்ளது.

பங்குகளின் ஏற்ற இறக்கங்கள்

இண்டஸ்இந்த் வங்கி, டாடா மோட்டார்ஸ், எம்&எம், கிராசிம், எஸ்பிஐ ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. ஓ.என்.ஜி.சி., பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ், கோட்டக் மஹிந்திரா, அதானி போர்ட்ஸ் போன்ற நிறுவன பங்குகளின் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின.

பங்குச் சந்தை

இன்றைய வர்த்தக நாள் முடிவில்,

  • மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 39.55 புள்ளிகள் உயர்ந்து 39,113.47 புள்ளிகளாக இருந்தது.
  • தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 9.65 புள்ளிகள் உயர்ந்து 11,559.25 புள்ளிகளில் நிறைவுற்றது.

ரூபாய்

74 ரூபாய் 31 காசுகளாக நிலை பெற்றிருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 காசுகள் உயர்ந்து 73 ரூபாய் 81 காசுகளாக இருந்தது.

பங்குச் சந்தை நிலவரம்

பொருள் வணிகச் சந்தை

  • கச்சா எண்ணெயின் விலை தற்போதைய நிலவரப்படி 50 புள்ளிகள் சரிந்து 3,185 ரூபாயாக வர்த்தகமானது.
  • தங்கத்தின் விலை தற்போதைய நிலவரப்படி 309 புள்ளிகள் சரிந்து 51,470 ரூபாயாக வர்த்தகமானது.
  • வெள்ளியின் விலை தற்போதைய நிலவரப்படி 969 புள்ளிகள் சரிந்து 66,560 ரூபாயாக வர்த்தகமானது.

ABOUT THE AUTHOR

...view details