நேற்று பங்குச்சந்தை முடிவின் பொது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 79.90 புள்ளிகள் சரிந்து 41,872.73 எனவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 19 புள்ளிகள் சரிந்து 12,343.30 எனவும் வர்த்தகமாகியுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே நிலவி வந்த பதற்றத்தால் இந்திய பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. இந்திய பங்குச்சந்தை என்று கூறுவதை விட உலகளாவிய பங்குச்சந்தைகள் அனைத்தும் கடும் சரிவைச் சந்தித்தன.
இந்நிலையில் நேற்று பங்குச்சந்தை தொடக்கத்தின் பொது கடும் சரிவைச் சந்தித்த வர்த்தக பங்குகள், முடிவின் பொது சற்றே உயர்ந்து வர்த்தகமாகியுள்ளது. மேலும் இன்டஸ்இன்ட் வங்கி பங்குகள் ஐந்து விழுக்காடுக்கும் மேல் சரிவைக் கண்டுள்ளது. சென்செக்ஸில் கடும் சரிவைச் சந்தித்த பங்குகளில் இன்டஸ்இன்ட் வங்கி முதலிடம் பிடித்துள்ளது.