கரோனாவிலிருந்து பொருளாதாரம் மீண்டுவந்து கொண்டிருக்கும் நிலையில், தொடர்ந்து நான்காவது மாதமாக ஜிஎஸ்டி வசூல், ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "இந்தாண்டு, மார்ச் மாதம், மொத்தமாக 1,23,902 கோடி ரூபாய் சரக்கு மற்றும் சேவை வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில் வசூலிக்கப்பட்ட தொகையை விட 27 விழுக்காடு அதிகமாகும்.
கடந்த சில மாதங்களாகவே பொய்யான பில்லிங்கை தீவிரமாக கண்காணித்தல், ஜிஎஸ்டி, வருமான வரி, முறையான வரி நிர்வாகம் போன்றவற்றால் வரிவருவாய் அதிகரித்துள்ளது.