கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கால் தொழில்துறை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக கடந்த ஏழு மாதங்களாக இந்தியாவில் தங்கத்தின் விற்பனை பெரிய அளவில் குறைந்துள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 52.8 டன்னாக இருக்கிறது.
ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது அதிகம் என்றாலும் கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 48 விழுக்காடு குறைவாகும்.
"பொதுவாக செப்டம்பர் மாதத்தை மோசமான மாதமாக இந்தியர்கள் கருதுவதால், இந்த மாதத்தில் அவர்கள் தங்கத்தை வாங்க விரும்ப மாட்டார்கள். இத்துடன் ஊரடங்கும் இணைந்து கொண்டதால் தங்கத்தின் தேவை பெருவாரியாகக் குறைந்துள்ளது" என்று துறைசார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல, விலைகள் அதிகரித்துள்ள நிலையிலும், தங்கத்தை விற்க இந்தியர்கள் யாரும் விரும்புவதில்லை. மாறாக அதை அடமானம் வைக்கவும் கடன்களுக்கு பிணையாக தங்கத்தைப் பயன்படுத்தவுமே அவர்கள் விரும்புகிறார்கள் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 24 விழுக்காடு குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல ரிசர்வ் வங்கி நடத்திய நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பிலும் செப்டம்பர் மாதம் நம்பிக்கைக் குறியீடு வரலாறு காணத அளவுக்கு 53.8 விழுக்காட்டில் இருந்து 49.9ஆகக் குறைந்தது.
இதையும் படிங்க:நாட்டில் வேலைக்கான போட்டி 30% உயர்வு: ஆய்வுத் தகவ