40 ஆண்டுகளில் இல்லாத வகையில், கடந்த 3 மாதங்களில் மட்டும் அதன் விற்பனை விகிதம் பன்மடங்கு அதிகரித்துள்ளதோடு, உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது என பார்லி ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏழைகளும் எளிதில் வாங்கக்கூடிய விலையில், 5 ரூபாய்க்கு பார்லி ஜி பிஸ்கட் கிடைப்பதால், இதனை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
கடந்த 1938ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பார்லி பிஸ்கட் நிறுவனமானது, 82 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. இதன் தயாரிப்பான பார்லி ஜி பிஸ்கட் பாக்கெட்களுக்கு மக்கள் மத்தியில், அதிலும் குறிப்பாக ஏழை, எளியோர் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.
காலையில் ஒரு பார்லி ஜி 5 ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டை வாங்கி, தேநீரில் நனைத்து சாப்பிட்டுவிட்டு, அன்றைய காலை உணவை முடித்துக் கொள்பவர்கள் ஏராளம்.
ஊரடங்கின்போது உணவு உற்பத்தி நிறுவனமான பார்லிக்கு விதி விலக்கு தரப்பட்டதால், லாக் டவுன் காலத்திலும் பார்லி ஜி பிஸ்கட் தயாரிப்புகள் தொடர்ந்து நடைபெற்றன.