தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

கடன் தவணை காலக்கெடுவை நீட்டிக்க முடியாது - ரிசர்வ் வங்கி திட்டவட்டம்

வங்கிக் கடன் தவணை செலுத்துவதற்கான காலக்கெடுவை ஆறு மாதத்திற்கு மேல் நீட்டிக்க முடியாது என ரிசர்வ் வங்கி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

RBI
RBI

By

Published : Oct 10, 2020, 5:54 PM IST

கரோனா பொது முடக்கம் காரணமாக ஏற்பட்ட பொருளாதார முடக்கத்தை பொது மக்கள் சமாளிக்க ரிசர்வ் வங்கி, வங்கிக் கடன் தவணை செலுத்த ஆறு (மார்ச் முதல் ஆகஸ்ட் வரை) மாத காலம் வரை காலக்கெடுவை நீட்டித்து சலுகை வழங்கியது.

மோராட்டோரியம் என்ற இந்த சலுகைக் காலத்தில் வங்கியில் இரண்டு கோடிக்கும் குறைவாக கடன் வாங்கியவர்களின் வட்டித் தொகை செலுத்த தளர்வு அளிக்கப்படும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த ஆறு மாத சலுகைக் காலத்தை மேலும் நீட்டிக்க உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று அளிக்கப்பட்டது. இந்நிலையில், இதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி, சலுகைக் காலத்தை நீட்டிக்க இனி எந்தவித சாத்தியக் கூறுகளும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. மேலும், இது சலுகைக் காலத்தை இதற்கு மேலும் நீட்டிப்பது வங்கி அமைப்புகளின் ஸ்திரத் தன்மையை சீர்குலைத்துவிடும் எனவும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

அதேவேளை, இந்தக் காலகட்டத்தில் கடன் செலுத்தாதவர்களின் கணக்குகளை வாரக்கடன் பட்டியிலில் சேர்க்கக்கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மாணவர்களுக்காக பிளிப்கார்ட் அறிமுகப்படுத்தும் புதிய திட்டம்

ABOUT THE AUTHOR

...view details