தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

கரோனாவை அமுல் எப்படி எதிர்கொள்கிறது? - நிர்வாக இயக்குநர் விளக்கம்

ஹைதராபாத்: கரோனா பாதிப்பு ஊடரடங்கு காலத்தில் அமுல் நிறுவனம் தனது சேவையை எப்படி தடையில்லாமல் மேற்கொள்கிறது என நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ். சோதி நமது ஈடிவி பாரத் நிறுவனத்திற்கு விளக்கமளிக்கிறார்.

amul
amul

By

Published : Apr 27, 2020, 3:04 PM IST

கரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கான அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில் உறுதிசெய்வதை அரசுடன் சேர்ந்து பல நிறுவனங்களும் கடுமையான பங்களிப்பை மேற்கொண்டுவருகின்றன.

இத்தகையச் சூழலில் பால், பால் சார்ந்த பொருள்கள் மக்களுக்குத் தடையின்றி கிடைப்பது மிகவும் அவசியம். இந்தியாவின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனமான அமுல் நிறுவனம் இந்தச் சூழலை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதை அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ். சோதி நமது ஈடிவி பாரத்திடம் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அவரிடம் நாம் எழுப்பிய கேள்விகளும், அவரது பதில்களும் வருமாறு:

அமுல் நிறுவனம் கரோனா காலத்தை சமாளித்து எவ்வாறு இயங்குகிறது?

எங்கள் நிறுவனம் 36 லட்சம் பால் உற்பத்தியாளர்களை நம்பி இயங்குகிறது. இந்தச் சூழலில் அவர்களிடமிருந்து பால் கொள்முதல்செய்து சிறு, குறு விற்பனையாளர்கள் எங்களிடம் தருவார்கள். தற்போது சிறு, குறு விற்பனையளர்கள் தற்போது தொழிலில் ஈடுபடாத சூழலில் எங்களுக்கு கூடுதலாக 15 விழுக்காடு கிடைக்கிறது. முதலில் சில சிக்கல்களைச் சந்தித்தாலும் தற்போது இடர்ப்பாடுகளைக் களைந்து இயங்கிவருகிறோம்.

அரசின் வழிகாட்டுதல்களை நிறுவனம் எவ்வாறு பின்பற்றுகிறது?

மார்ச் 17ஆம் தேதியிலிருந்தே அரசின் அனைத்து வழிகாட்டுதல்களையும் தொடர்ச்சியாகப் பின்பற்றிவருகிறோம். ஆரம்பத்திலிருந்தே இந்த விஷயத்தை கவனமாக கையாண்டுவருகிறோம். குஜாத்தில் உள்ள 18 ஆயிரத்து மையங்களில், பால் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பு உபகரணங்கள், தகுந்த இடைவெளி ஆகியவற்றைச் சீராகப் பின்பற்றிவருகிறோம். பணியிடங்கள் தொடர்ச்சியாக கிருமிநாசினிகள் கொண்டு தூய்மைப்படுத்தப்படுகின்றன.

இந்தச் சூழலில் தொழிலாளர்களின் சிக்கலை எவ்வாறு கையாளுகிறீர்கள்?

ஆம், முதலில் இந்தச் சிக்கல் காரணமாக டெல்லி, மும்பை, கொல்கத்தா, குஜராத் ஆகிய பகுதிகளில் வேலையாள்கள் கிடைக்காமல் தவித்துவந்தோம். 30 விழுக்காடு பணியாளர்கள் தேவைக்கும் குறைவாகவே இருந்தனர். பின்னர் எங்களின் முயற்சிக்குப்பின் தேவையான வேலையாள்களை நாங்கள் பணியமர்த்தியுள்ளோம்.

இந்தப் பாதிப்பு அமுல் நிறுவனத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறீர்கள்?

தொழிலாளர்களின் பாதுகாப்புதான் எங்களின் முக்கியச் சவாலாக உள்ளது. உற்பத்தி, கொள்முதல் ஆகியவை தற்போதைக்கு எந்தவித பாதிப்பும் சந்திக்கவில்லை. சொல்லப்போனால் ராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் எங்களது விற்பனை இரு மடங்காக உயர்ந்துள்ளது.

தற்போதைய நவீன தொழில்நுட்பம் நிறுவன பணிகளில் எத்தகைய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது?

தடையற்ற இணைய தொழில்நுட்பம் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது. அலுவலகப் பணிகளுக்கு மிகவும் குறைந்த நபர்களையே கொண்டு தற்போது பணிபுரிந்துவருகிறோம். பெரும்பாலான அலுவலகப் பணியாளர்கள் வீட்டிலிருந்தே வேலைசெய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:50,000 கோடி ரூபாய் கடனுதவி வழங்கும் ரிசர்வ் வங்கி!

ABOUT THE AUTHOR

...view details