2019ஆம் ஆண்டில் சிறந்து விளங்கும் தொழில்முனைவோருக்கு, 12வது ஆண்டாக டைகான்(Tiecon) விருது வழங்கும் நிகழ்ச்சி கிண்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொழில் நிறுவன தலைவர்கள், முனைவோர்கள், கல்வியாளர்கள், வளர்ந்துவரும் ஸ்டார்ட்-அப்பை சேர்ந்தவர்கள்(Start-up) என 400க்கும் மேற்பட்டோர் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு சமுதாய பங்களிப்புகளின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனை விருது, சென்னை ஐ.ஐ.டி.யின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் எம்.எஸ். ஆனந்த்க்கு வழங்கப்பட்டது.