தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பாடும் லட்சுமி விலாஸ் வங்கி மீது நேற்று ரிலிகேர் ஃபின்வெஸ்ட் என்ற நிதிச்சேவை நிறுவனம் புகார் ஒன்று எழுப்பியது. ரிலிகேர் நிறுவனத்தின் வைப்புநிதியான 790 கோடி ரூபாயை வங்கி முறைகேடாகப் பயன்படுத்தியதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் டெல்லியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், லட்சுமி விலாஸ் வங்கிமீது ரிசர்வ் வங்கி இன்று அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதில் லட்சுமி விலாஸ் வங்கிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்போவதாகவும், இனி மாதம்தோறும் லட்சுமி விலாஸ் வங்கி தனது செயல்பாடுகள் குறித்து ரிசர்வ் வங்கிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.