லட்சுமி விலாஸ் வங்கி, சிண்டிகேட் வங்கி ஆகியவற்றில் விதிமீறல், முறைகேடுகள் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து பாரத ரிசர்வ் வங்கி இந்த வங்கிகளுக்கு அபராதம் விதித்தது. அந்த வகையில் லட்சுமி விலாஸ் வங்கிக்கு ஒரு கோடியும் சிண்டிகேட் வங்கிக்கு ரூ.75 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதன் தாக்கம் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இதையடுத்து லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள், மும்பை பங்குச் சந்தையில் 4.96 சதவீதம் சரிவை சந்தித்து ரூ.22.05-க்கு விற்பனை ஆனது. இது கடந்த ஓராண்டில் அவ்வங்கி சந்தித்த மிக மோசமாக சரிவாகும்.