கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் லாக் டவுன் எனப்படும் முழு முடக்கம் அமலுக்கு வந்துள்ளது. சுகாதாரத் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அத்தியாவசிய துறைகள் மட்டுமே இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தினசரி தொழிலில் ஈடுபடும் அமைப்பு சாரா தொழிளாலர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் அதிகளவில் உள்ள கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்காக அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு உதவித் தொகை நேரடியாக வழங்கப்படும் என மத்திய தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.