தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

கூடங்குளம் அணு உலை விரிவாக்கம்: ரூ. 2500 கோடி திட்டம் எல்&டி கையில்! - கூடங்குளம் போராட்டம்

கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்கத் திட்டமான 5, 6 ஆகிய அலகின் கட்டுமான வேலைக்கான ஒப்பந்தப்புள்ளி, லார்சன் அன்ட் டூப்ரோ கட்டுமான நிறுவனத்திற்குக் கிடைத்திருக்கிறது. இந்த ஒப்பந்தப்புள்ளியின் மதிப்பு ரூ.2500 கோடி ஆகும்.

Kudankulam Nuclear Power
Kudankulam Nuclear Power

By

Published : Feb 18, 2021, 4:44 PM IST

டெல்லி:கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்கத் திட்டத்தின் புதிய ஒப்பந்தப்புள்ளி லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.

இந்த புதிய ஒப்பந்தப்புள்ளியின் மதிப்பு ரூ.2500 கோடியாகும். முன்னதாக நடந்துவரும் 3, 4ஆகிய அலகுகளின் வேலைகளையும் லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் தான் எடுத்து செய்துவருகிறது.

எல் அண்ட் டியின் இந்த ஒப்பந்தப்புள்ளியில், 64 மாத காலத்திற்குள் அணு உலை கட்டடம், உலை துணை கட்டடம், விசையாழி கட்டடம், டீசல் ஜெனரேட்டர் கட்டடம், பாதுகாப்பு தொடர்பான கட்டமைப்புகள் ஆகியவை கட்டி முடிக்கப்படவேண்டும்.

மொத்தம் ஆறு அலகுகளைக் கொண்ட கூடங்குளம் அணுமின் நிலையம் , தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திறன் கொண்டதாகும் என மத்திய அரசு கூறியுள்ளது. மேலும், இதன் மூலம் மாநிலங்களின் மின்சாரத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details