தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பிரதமர் நிவாரண நிதிக்கு 150 கோடி ரூபாய் அளிக்கும் எல்&டி நிறுவனம்! - பிஎம்-கோ்ஸ் நிதிக்கு 150 கோடி ரூபாய்

டெல்லி: கரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள பிரதமரின் பிஎம்-கோ்ஸ் நிதிக்கு 150 கோடி ரூபாயை அளிக்க உள்ளதாக எல்&டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

L&T announces Rs 150cr donation
L&T announces Rs 150cr donation

By

Published : Mar 31, 2020, 9:30 AM IST

கரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு உதவவும், கரோனா வைரஸ் தொற்றை தடுக்கவும் மத்திய அரசு நிதி திரட்டி வருகிறது.

இதற்கு பல முன்னணி நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அதன்படி, இந்தியாவின் மிகப்பெரிய பொறியியல் கட்டுமான நிறுவனமான எல்&டி 150 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதுதவிர, நிறுவனத்தின் 1.60 லட்சம் ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மாதத்துக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் கரோனா நோய்த்தொற்று தொடா்பான பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், கிசிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறோம் என்று எல்&டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்காவில் தொடரும் கரோனா பரிசோதனை

ABOUT THE AUTHOR

...view details