நிதி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த 256 நபர்களிடம் எடுக்கப்பட்ட இந்த சர்வேயில், சுமார் 74 சதவீதம் பேர் தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்படலாம் என்றும், 10 கோடிக்கும் மேல் வருமனம் ஈட்டும் பெரும் பணக்காரர்களுக்கு புதிதாக 40 சதவீதம் வரி அறிமுகப்படுத்தப்படலாம் என்று 58 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் 1953 முதல் 1985ஆம் ஆண்டு வரை இருந்த பரம்பரை வரி எனப்படும் மூதாதையர்களிடமிருந்து பெரும் சொத்துக்களுக்கான வரி மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம் என்று 13 சதவீதம் பேரும் எஸ்டேட் வரி மீண்டும் அமல்படுத்தப்படலாம் என்று 10 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.