தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

மத்திய அரசு அறிவித்த இந்த நிதி திட்டத்தால் ஒரு பயனும் இல்லை- குமுறும் மாநில அரசுகள் - குமுறும் மாநில அரசுகள்

டெல்லி: கரோனா பொருளாதார மேம்பாட்டிற்காக மத்திய அரசு நிதியளிப்பதாக கூறி மாநில அரசுகளை பிச்சைக்காரர்களை போல நடத்துவதாக தெலங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

FM's Reform package
FM's Reform package

By

Published : May 20, 2020, 12:40 AM IST

இந்தியா முழுவதும் கரோனா வைரஸால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்ததால் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் பொருளாதார மேம்பாட்டிற்காக மத்திய அரசு ரூ. 20 லட்சம் கோடி அளவிலான மேம்பாட்டு திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 பகுதிகளாக 5 நாட்கள் அறிவித்தார். ஆனால் மத்திய அரசின் இந்த திட்டங்களால் பெரிய பயன் எதுவும் இல்லை என பல அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மாநில அரசு பயன்பெறும் வகையில் இந்த திட்டம் இல்லை என தெரிவித்துள்ளார். கேரள முதலமைச்சர், மத்திய அரசு அறிவித்த இந்த திட்டம் திருப்தி அளிக்கும் விதமாக இல்லை என கூறியுள்ளார்.

மேலும் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசியுள்ள தெலங்கான முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ,"மத்திய அரசு அறிவித்துள்ள சுயசார்பு பொருளாதார திட்டம் உண்மையாக மோசடி திட்டம். வெறும் நம்பர்களை கூறி மாநில அரசுகளை ஏமாற்றுகிறார்கள். மத்திய அரசின் திட்டங்கள் சர்வதேச நாளிதழ்களில் நகைப்புக்குரிய செய்தியாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.

மேலும் ”மாநிலங்கள் நிதிப்பொறுப்பு மேலாண்மையில் 2 சதவீதம் கூடுதலாக கடன்பெற மத்திய அரசு அனுமதித்துள்ளது. இந்த தொகையை மாநில அரசுகள்தான் செலுத்த போகின்றன. நாங்கள் உங்களிடம் பணம் கேட்டால் எங்களை பிச்சைக்காரர்களை போல நடத்துகிறீர்கள். மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியும், நிதியமைச்சரும் அறிவித்துள்ள பொருளாதார ஊக்கத் திட்டத்தால் மாநில அரசுக்கு எந்த ஒரு பயனும் இல்லை இது ஒரு " ஜீரோ " திட்டம் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வீட்டிலிருந்தபடியே மருத்துவ பரிசோதனை - கரோனாவைக் கட்டுப்படுத்தும் செயலி

ABOUT THE AUTHOR

...view details