இந்தியாவின் மிகப் பெரிய கோடிஸ்வரரான முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பேஸ்புக்கில் தொடங்கி பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் முதலீடு செய்தன.
இந்நிலையில், முகேஷ் அம்பானியின் மற்றொரு நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெய்ல் தற்போது முக்கிய வெளிநாட்டு முதலீடை பெற்றுள்ளது. அதன்படி ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் ரூ. 5,550 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அமெரிக்காவின் பிரபல முதலீட்டு நிறுவனமான கேகேஆர் அறிவித்துள்ளது.
இது குறித்து முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கே.கே.ஆர். பல ஆண்டுகளாக இந்தியாவில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர். எங்கள் டிஜிட்டல் சேவைகள் மற்றும் சில்லறை வணிகங்களில் கே.கே.ஆரின் தொழில் அறிவு மற்றும் செயல்பாட்டு நிபுணத்துவத்துடன் பணியாற்ற தயாராகவுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்,
ரிலையன்ஸ் குழுமத்தில் சில்லறை வர்த்தக பிரிவான ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்தியாவில் தற்போது வேகமாக வளர்ந்துவரும் சில்லறை வர்த்தக கடைகளில் ரிலையன்ஸ் ரீடெய்ல் முதன்மையானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "எங்கள் திட்டம் இதுதான்" - ரியல்மி சிஇஓ திட்டவட்டம்