டெல்லி:1000 உணவகங்களை இணைத்து சத்துமிகுந்த உணவுகளை பயனர்களுக்கு அளிக்க ஸ்விகி நிறுவனம் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையை முதலில் பெங்களூரு நகரத்தில் செயல்படுத்தியுள்ளது.
‘ஹெல்த் ஹப்’ எனும் பெயரிடப்பட்டுள்ள இந்த சேவையானது, கரோனா காலத்தில் தங்களின் பயனாளிகள் சத்துமிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள உதவும். அவர்களின் தேவைகளை நன்கு ஆராய்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக ஸ்விகி நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் விவேக் சுந்தர் கூறியிருக்கிறார்.
மேலும், இந்த சேவையை அடுத்த ஆறு மாதங்களில் அனைத்து நகரங்களிலும் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறிய அவர், கிச்சடி, பாரம்பரிய உணவுகள் போன்றவை ‘ஹெல்த் ஹப்’ பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கரோனா ஊரடங்கில் லட்ச கணக்கில் பிரியாணிகளை தின்று முழுங்கிய இந்தியர்கள்!
'ஹெல்த் ஹப்' இப்போது பெங்களூருவில் 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் செயல்பட்டுவருகிறது. இதில் பிரபலமான உணவகங்களான க்ரோ ஃபிட், ட்ரஃபிள்ஸ், அடிகாஸ், சாய் பாயிண்ட், அப்சரா ஐஸ்கிரீம்கள், புரூக்ளின் க்ரீமரி போன்றவற்றிலிருந்து உணவுகள் பயனர்கள் பதிவின் அடிப்படையில் அவரவர் தங்களது வீடுகளுக்கு கொண்டு சென்று வழங்கப்படுகிறது.