மருந்து தயாரிக்கும் மூலப்பொருள்களின் விலையேற்றம், அந்நியச் செலவாணியில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி மருந்துகளின் விலையை உயர்த்த தேசிய மருந்துப்பொருள் விலை நிர்ணய ஆணையம் (National Pharmaceutical Pricing Authority - NPPA) அனுமதியளித்துள்ளது.
அதன்படி அத்தியாவசிய மருந்துகளான ஆன்டிபயாடிக், அலர்ஜி, மலேரியா மருந்துகள், பிசிஜி தடுப்பூசி (BCG Vaccine), வைட்டமின் சி உள்ளிட்ட 12 வகையான மருந்துகளின் விலையை உயர்த்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.