தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 10, 2020, 7:09 PM IST

ETV Bharat / business

'ஜோ பைடனின் வெற்றி இந்தியாவில் கச்சா எண்ணெய் விலையை குறைக்கும்'

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் தந்த தேர்தல் வாக்குறுதியான ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுமேயானால், இந்தியாவில் கச்சா எண்ணெய்யின் விலை குறையும் என எரிசக்தி நிபுணர் ஹிரன்மாய் ராய் தெரிவித்துள்ளார்.

Joe Biden  Diesel prices
'ஜோ பைடனின் வெற்றி இந்தியாவில் கச்சா எண்ணெய் விலையை குறைக்கும்'- எரிசக்தி நிபுணர் கருத்து

டெல்லி: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் பெற்றுள்ள வெற்றி இந்திய எரிசக்தி துறையில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும் என பெட்ரோலியம் மற்றும் எரிபொருள் ஆய்வுகளுக்கான பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் பன்னாட்டு வணிகத்துறையின் துறைத் தலைவர் ஹிரன்மாய் ராய் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜோ பைடன் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிப்பார் எனவும், அதற்கு சில காலங்கள் ஆகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உள்நாட்டு, வெளிநாட்டு எரிசக்தி சந்தையின் போக்கை உன்னிப்பாக கவனித்துவரும் ராய், உலக எரிபொருள் சந்தையில் புவிசார் அரசியலின் சமன்பாடு முக்கியப் பங்குவகிப்பதாகவும், அணு சக்தி ஒப்பந்தத்தை பைடன் புதுப்பிப்பதன் மூலம் இந்தியா அண்டை நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய்யை குறைந்த விலையில் பெறமுடியும் எனவும் தெரிவித்தார்.

அதிபர் தேர்தல் பரப்புரையின்போது ஜோ பைடன், 2016ஆம் ஆண்டு ஓபாமா அதிபராக இருந்த காலத்தில் நடைமுறைக்குவந்து, பின் டிரம்ப் ஆட்சியில் நீக்கப்பட்ட கூட்டு விரிவான செயல்திட்டம்(Joint Comprehensive Plan of Action) புதுப்பிக்கப்படும் என வலியுறுத்தியிருந்தார்.

அணுசக்தி ஒப்பந்தம் என அறியப்படும் கூட்டு விரிவான செயல்திட்டத்தில், ஈரான், அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தமானது, ஈரான் செரிவூட்டப்பட்ட யூரேனியத்தை சேமிப்பதை நிறுத்தினால், அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் நீங்கும் என்பதை கூறுகிறது.

பொருளாதார தடைகள் முழுவதுமாக டிரம்ப் ஆட்சியில் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு ஈரான் இந்தியாவிற்கு கச்சா எண்ணெயை வழங்கும் மூன்றாவது நாடு என்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க:தோகா அமைதி ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் நீங்கள் ? - தலிபான்

ABOUT THE AUTHOR

...view details