அமெரிக்க வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 14.7 விழுக்காட்டை எட்டியுள்ளது. இது பெரும் மந்தநிலைக்குப் பின்னர் மிக உயர்ந்த விகிதமாகும். ஏனெனில் 20.5 மில்லியன் வேலைகள் மிக மோசமான இழப்பைப் பதிவுசெய்துள்ளன.
கரோனா பாதிப்புக்குப் பிறகு இந்த நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. இதனைப் புள்ளிவிவர தகவல்கள் வாயிலாக அறியமுடிகிறது.
அமெரிக்காவில், கிட்டத்தட்ட ஒவ்வொரு தொழிற்துறையிலும் ஏற்பட்ட திடீர் வணிக இழப்புகளால் இந்த மந்தநிலை ஏற்பட்டுள்ளது. பெரும் மந்தநிலைக்கு மத்தியில் மீட்டெடுக்கப்பட்ட 11 ஆண்டுகால பொருளாதாரமும் ஒரு மாத மந்தநிலையில் சிக்கியுள்ளது.