தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

இன்னும் சில மாதங்களில் 5ஜி சேவை - அதிரடி காட்டும் அம்பானி

டெல்லி: அடுத்தாண்டு இரண்டாம் பாதியில் இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவன்தின் தலைவர் அம்பானி அறிவித்துள்ளார்.

Jio to launch 5G services
Jio to launch 5G services

By

Published : Dec 8, 2020, 1:01 PM IST

இந்தியாவில் 4ஜி தொழில்நுட்பத்தில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டுவந்தது ரிலையன்ஸின் ஜியோ. அதேபோல 5ஜி தொழில்நுட்பத்திலும் மிகப் பெரிய மாற்றத்தை ஜியோ ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் பேசிய முகேஷ் அம்பானி, "2021ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவில் ஏற்படும் 5 ஜி புரட்சிக்கு ஜியோ முன்னோடியாக இருக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு சான்றாக ஜியோவின் 5ஜி சேவை இருக்கும்.

சர்வதேச அளவில் தொழில்நுட்பத்தால் மிக சிறப்பாக இணைக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது. இருப்பினும், தற்போதும் இங்கு 30 கோடி மக்கள் 2ஜி மொபைல்போன்களை பயன்படுத்துகிறார்கள். இவர்களிடம் ஸ்மார்ட்போன்களை எடுத்துச் செல்ல கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும் . அப்போதுதான், அவர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் பயனடைவார்கள்" என்றார்.

மேலும், ஸ்மார்ட்போன்களை தயரிக்க மிக முக்கிய பாகமாக கருதப்படும் சேமிகண்டக்டர்களை (Semiconductors) அதிகளவில் உருவாக்க தேவையான தொழிற்சாலைகளை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காபி டே சிஇஓ பொறுப்புக்கு சித்தார்த் மனைவி மாளவிகா தேர்வு!

ABOUT THE AUTHOR

...view details