கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் தீரவிரமைடந்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் குடும்பங்களுடன் தொடர்பு கொள்ள இயலாமல் தவித்துவருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையளர்களுக்கு ரூ. 10க்கு இலவசமாக ரீசார்ஜ் செய்யப்படும் என்று அறிவித்தது.
இந்நிலையில், ஜியோ நிறுவனமோ தனது ஜியோஃபோன் வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 100 நிமிட இலவச டாக்டைம் மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும், ரீசார்ஜ் காலம் நிறைவடைந்தவர்கள் உள்பட அனைவரும் தொடர்ந்து இன்கம்மிங் கால்களை இலவசமாகப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் குறைந்த வருவாய் பெறும் குடும்பங்களிடமிருந்து பிரிந்து இருக்கும் தொழிலாளர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களை எளிதில் தொடர்பு கொள்ளலாம் என்றும் ஜியோ கூறியுள்ளது.
இதையும் படிங்க:'வாய்ஸ் காலை இலவசமாக்குங்கள்' - பிரியங்கா காந்தி கோரிக்கை!